மெதடிஸ்த மத்திய கல்லூரி நடாத்தும் இரத்ததான நிகழ்வு...... இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.....
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடாத்ததும் மாபெரும் இரத்ததான நிகழ்வு 16.10 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் பாடசாலை மண்டபத்தில் நடாத்தவுள்ளதாக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு நிலவி வருவதால் பலரும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தினமும் பலரும் பல விதமான நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் அவர்களுக்கு இரத்தம் வழங்க வேண்டி ஏற்படுகின்றது. இதற்கான இரத்தம் தற்போது இல்லாது தட்டுப்பாடாக காணப்படுவதாக மட்டக்களப்பு வைத்தியசாலை தெரிவிக்கின்றது.
எனவே இதற்கான ஒரு நல்ல முயற்சியை மேற்மேற்கொள்ளும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை நாம் பாராட்டுகின்றோம். எனவே ஒரு துளி இரத்தம் வழங்கி ஓர் உயிரை காப்பதற்கு நாமும் முன்வருவோம். மறந்திட வேண்டாம் 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலை மண்டபத்திற்கு வாருங்கள்.................
Comments
Post a Comment