அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டி ......
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அம்பாறை மாவட்ட அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 2022ஆம் ஆண்டிற்கான பாடல் போட்டி (20) அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் J.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை சாரா உத்தியோகத்தர்கள் என இரு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. 08 பதவி நிலை உத்தியோகத்தர்கள் போட்டியாளர்களும், 34 பதவி நிலை சாரா உத்தியோகத்தர்கள் போட்டியாளர்களும் பங்குபற்றி இருந்தனர். இம்மாவட்ட மட்ட போட்டிகளில் இருந்து 03 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றுவார்கள். கடந்த (16)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டிகள் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி நிகழ்வு 2022ல் இரண்டாவது தடவையாக நடைபெறுகின்றது. இப்போட்டிகளை அம்பாறை மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் V.கோணேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment