லங்கா பிரீமியர் லீக் புதிய இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.....

லங்கா பிரீமியர் லீக் புதிய இலச்சினை அறிமுகப்படுத் தப்பட்டிருக்கின்றது.....



 2022ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் பயன்படுத்தப்படவுள்ள புதிய இலச்சினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மூன்றாவது முறையாக  நடைபெறவுள்ள இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடரின் இலச்சினையினை இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர் ஒருவரே வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை கிரிக்கெட் சபை புதிய இலச்சினையினை வடிவமைப்பதற்கான போட்டித் தொடர் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்ததோடு, இந்தப் போட்டித் தொடரின் மூலமே இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர் வடிவமைத்த இலச்சினையானது LPL தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்த இலச்சினையினை வடிவமைத்த கண்டி நகரினைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய மியூலிக்கா வீரமந்திரிக்கு 1000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 366,000) பணப்பரிசும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் வைத்து நேற்று (20) வழங்கப்பட்டிருக்கின்றது.

சிங்கத்தினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய இலச்சினை LPL போட்டித்தொடர் நடாத்தப்படுகின்ற நாடு வெளிப்படுத்தும் தைரியம், தீர்மானம் மற்றும் வலிமை போன்ற குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாகவும் இலச்சினையில் உள்ள துடுப்பாட்டவீரரின் படம் T20 கிரிக்கெட்டினை சுற்றி இருக்கும் உற்சாகத்தினையும், சக்தி மற்றும் வலுவினை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.


Comments