அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் மாணவன் முஹம்மட் உஷாமில் தங்கம் வென்று வரலாற்று சாதனை.......

 அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் மாணவன் முஹம்மட் உஷாமில் தங்கம் வென்று வரலாற்று சாதனை.......

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மட் உஷாமில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற மாகாண மட்ட (Tae Kwando) கராத்தே போட்டியில் இப்பாடசாலை சார்பாக கலந்து கொண்ட ஒரேயொரு போட்டியாளராகிய இவர், தங்கப்பதக்கம் பெற்றமை பாராட்டப்பட வேண்டியதாகுமென பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஷால் தெரிவித்தார்.

இம்மாணவனின் வெற்றிக்கு உறுதுணையாக பயிற்சிகளை சிறப்பாக வழங்கிய கல்முனை பிராந்தியத்தின் (Tae Kwando) பயிற்றுவிப்பாளரும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருமான யு.எல்.எம்.இப்ராஹிம், உதவி பயிற்சியாளர் எம்.எச்.அஹமட் ஹஸீன், பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாடசாலைச்சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாக அதிபர் தெரிவித்தார்.

Comments