நவம்பரில் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைகள் ஆணையாளர்......
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை நவம்பர் மாதத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் இடம்பெற்றது. தற்போது பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளால், நவம்பர் 25 ஆம் திகதியளவில் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் மே மாதம் நடைபெற்றது. பரீட்சைக்குத் தோற்றிய 517,86 மாணவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்களும் 110,367 பேர் தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர்.
Comments
Post a Comment