சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்பள்ளி சிறார்களுக்கான போசாக்கு வேலைத்திட்டம்.......
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் முன்பள்ளி பாடசாலைகளான அஸ் ஸஜீ முன்பள்ளி படசாலை மற்றும் அஸ் ஸபா முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கு போசாக்கான உணவினை அறிமுகப் படுத்தும் பொருட்டு பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாஞ்சோலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ் அவர்களின் தலைமையில் (05) அஸ் ஸஜீ முன்பள்ளி கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் வீ.தவராஜா அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் விடய பொறுப்பு உத்தியோகத்தர் கே. கலாரூபி, அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.நூறுதீன், முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட முன்பள்ளி மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் போசாக்கான மாதிரி பகல் உணவு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment