“சிறுவர் நேய மாநகரம்” திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையின் அங்குரார்ப்பணம்!!
“சிறுவர் நேய மாநகரம்” திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையின் அங்குரார்ப்பணம்!!
மட்டக்களப்பு மாநகர சபையுடன் யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் “சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டத்தின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வானது (03) நடைபெற்றது.
சிறுவர்களின் எதிர்கால உடல்உள மேம்பாட்டை கருத்தில்கொண்டு அவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டியின் பாவனையினை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்களின் தலைமையில் (03) அன்று காலை கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம் மதன், சிவம் பாக்கியநாதன், S.ஜெயா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் க.ஹரிகரராஜ், யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்களின் அதிகாரிகள், மாநகரசபை உத்தியோகஸ்த்தர்கள், மாணவர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தருகில் ஆரம்பமான சைக்கிள் பவனி சைக்கிள் பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட வீதியின் பகுதி ஊடாக மட்டக்களப்பு வெபர் மைதானம் வரையில் வருகைதந்ததுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மாணவர்களின் அதிகரித்துச் செல்லும் உடற்பருமனை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு நோக்கினைக் கொண்டு இந்த திட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்கள் தெரிவித்தார்.
Comments
Post a Comment