போசனை உணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்......

 போசனை உணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்......



சிறார்களின் போசாக்கினை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் முன்பள்ளி பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறார்களுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை 206 கிராம சேவகர் பிரிவில் அல் முனீரா முன்பள்ளி மாணவர்களுக்கான போசனை உணவு வழங்குவதற்கான முன் ஆயத்த பணிகளை செய்வதற்கான கலந்துரையாடல் அன்மையில் நடைபெற்றது. எதிர்வரும் 2022 ஒக்டோபர் 17 ம் திகதி தொடக்கம் செயற்படுத்துவதற்கான இக்கலந்துரையாடல்  நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் யூ.ரெஜித்தா, முன்பள்ளி ஆசிரியைகள் பெற்றார்கள் கலந்து கொண்டனர் 






Comments