மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் கல்வி அபிவிருத்திக்குழு ஏற்பாட்டில் இலவசக்கருத்தரங்கு .....
மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் மீராவோடை
கல்வி அபிவிருத்திக்குழு ஆகியன இணைந்து நடாத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்கு (22) திகதி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் தலைவர் அல் ஹாஜ் ஏ.எஸ்.அலியார் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளருமான கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தலைவரும் பாடசாலை அதிபருமான கே.எல்.எம்.சபாஹிர், செயலாளர் எம்.எம்.மஃறூப் (அதிபர்) மற்றும் பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் சுமார் 250ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். எம்.ஐ.முறாத் (BA.pgde.dip.in.pri), எம்.எச்.எம்.சதாத் (BA.pgde.dip.in.pri) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment