சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு வேலைத் திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு.......

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு வேலைத் திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு.......



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை   முன்னிட்டு பல்வேறு வேலை திட்டத்தை (17) அன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டன. இதில் பிரதானமாக முன்பள்ளி சிறார்களுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது  208C கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள RDS முன்பள்ளி சிறார்களுக்கான போசாக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

அத்துடன் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள், லொட்டறி வீடுகள் சமுர்த்தி பயனாளியடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதன் போது ஓட்டமாவடி 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளியான யு.லெ.மு.அப்துல் லத்தீப் அவர்களுக்கு லொற்றரி மூலம் கிடைக்கப்பெற்ற  வீடு கையளிக்கப்பட்டதுடன், மீராவோடை கிழக்கு 207Bகிராம உத்தியோகத்தர் பிரிவைச் என்.எம்.முகம்மது ஹனீபா அவர்களின் சமுர்த்தி சௌபாக்கியா வீடும் கையளிக்கப்பட்டது. இத்துடன், மீராவோடை மேற்கு 207 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளியான என்.எம்.நபீறா அவர்களுக்கும் சமுர்த்தி சௌபாக்கியா வீடு கையளிக்கப்பட்டது.

 சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் கே.மதீனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம்.சாஜஹான், எம்.எஸ்.எப்.சுகுரியா, எம்.எல்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், முன்பள்ளி ஆசிரியைகள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.











Comments