களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோரின் அலுவலக அதிகாரிகளினால் விசாரணை முன்னெடுப்பு!!
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்ற விசாரணைகளின்போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விசாரனைகள் இடம்பெற்றுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் பரிந்துரை செய்யும் என இதில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரினால் கருத்து தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment