பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன..............

 பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன..............



இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரான ஹஷான் திலகரத்ன, பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் குறித்த பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

55 வயதான, ஹஷான் திலகரத்ன இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக கடந்த 2003 - 2004 காலப் பகுதியில் கடமையாற்றியிருந்தார். பிரதானமாக துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட இவர், விக்கெட் காப்பாளர் மற்றும் பந்துவீச்சாளராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹஷான் திலகரத்ன, அதிகூடிய ஓட்டமாக ஆட்டமிழக்காமல் பெற்ற 205 ஓட்டங்களுடன் மொத்தமாக 4,545 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 11 சதங்கள், 20 அரைச்சதங்கள் உள்ளடங்குகின்றன.

1989ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஹஷான் திலகரத்ன, 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியுடன் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments