அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்.!!
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியில் பங்குபற்றியே இச்சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியானது யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட ரவீந்திரன் டிலுஷாந்த் முதலாம் இடத்தினையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார். அத்தோடு லண்டன் செல்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.
Comments
Post a Comment