மட்டு விவேகானந்தா மகளீர் கல்லுரியின் இரத்ததான நிகழ்வு......

 மட்டு விவேகானந்தா மகளீர் கல்லுரியின் இரத்ததான நிகழ்வு......



மட்டக்களப்பு  கல்லடி உப்போடை  விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு விவேகானந்தா  மகளீர் கல்லூரியின் நடராஜானந்தா மண்டபத்தில் (22) சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவி தெரிவித்துள்ளார்.

 தற்போதை கால கட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின்  இரத்த  வங்கியில்  குருதி தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதை ஓரளவேனும் தம்மால் முடிந்தளவு கொடையாளிகளை தேடி கண்டடைந்து இப்பணியை வெற்றிகரமாக முடிக்க தாம் முயற்சிப்பதாகவும் முடியுமான வரை விவேகானந்தா பாடசாலையின் பழைய மாணவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி இவ் இரத்ததான நிகழ்வை வெற்றிகரமாக முடிக்க உதவுமாறும் பாடசாலையின் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு விவேகானந்தா  மகளீர் கல்லூரியின் 2021ல் கல்வி கற்ற மாணவிகள் ஒழுங்கமைத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்"



Comments