பிரபல தொழிலதிபர் ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு டாக்டர் மற்றும் தேசமான்ய பட்டங்கள்......
கிழக்கின் பிரபல தொழில் அதிபரும் மட்டக்களப்பு தழிழ்சங்க தலைவருமான சைவப்புரவலர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றினால் வர்த்தகத்துறைக்கான கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய வர்த்தக பல்கலைகழகமானது உலகளாவிய ரீதியிலே நடாத்திய தேர்வில் இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து பிரபல தொழில் அதிபர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்களை தெரிவுசெய்துள்ளது.
Doctor of Business Administration என்ற இப் பட்டத்தினை பெற்ற டாக்டர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி முதலாவது கிழக்கு மாகாணத்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவருக்கான விருது வழங்கும் வைபவம் (26) அன்று கொழும்பு தாஜ்சமுத்திரா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதே வேளை இலங்கை சாதனையாளர் மன்றம் டாக்டர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு லங்கா தேசமான்ய என்கின்ற கௌரவ பட்டத்தினையும் வழங்கி கௌரவித்திருக்கின்றது.
இந்த உயரிய இரு கௌரவத்தினையும் பெற்ற டாக்டர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன்.
களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாக கொண்டடாக்டர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்கள் தற்போது மட்க்களப்பில் வசித்து வருகின்றார். நிருமாணத்தறையில் கொடிகட்டிப்பறக்கும் அவர் பல நிறுவனங்களின் தொழில் அதிபராகவும் இருக்கின்றார்.
Comments
Post a Comment