மின் கட்டணம் மீண்டும் உயரும் சாத்தியம் ?
மின்சார கட்டணம் மேலும் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும், இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 290 கோடி டொலர் கடன் தொகை தொடர்பில் ஒரு நிபந்தனையாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்த கடன் தொகை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முன்னர் இந்த மின் கட்டண அதிகரிப்பு அவசியம் என குறித்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் மத்திய வங்கிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபை மின் கட்டனத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. அதனூடாக இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் கிடைக்கும் மேலதிக வருமானம் 1500 கோடி ரூபாவாகும். எவ்வாறாயினும், அவ்வாறு மேலதிக வருமானம் கிடைத்தும் இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் பின்னணியில் மீள மின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதுவரை மின் கட்டணத்தை மீள உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Comments
Post a Comment