இன்று கிழக்கு மண்ணின் ஒரு விசித்திர புள்ளியாக நம் மத்தியில் திகழும் ஏறாவூர் அறபா கல்லூரி.....
2019 ஆண்டுகளுக்கு முன் ஏறாவூர் அறாபா கல்லூரியில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டே இருக்கவில்லை என்றே சொல்லலாம். மாணாக்கர்கள் தம் பொழுது போக்கிற்காக மென் பந்து கிரிக்கெட் விளையாடி வந்தனர். இதன் போது அறபா கல்லூரிக்கு புதிய ஒரு நியமனமாக 2019ம் ஆண்டு 05ம் மாதமளவில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எனும் ஓர் பதவியுடன் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல ஏறாவூர் YHSC விளையாட்டு கழகத்தின் வீரரான முகமட் பாஸில் அவர்கள்.
பாடசாலை வந்ததும் தம் திறமையான அனுபவத்தை கொண்டு அறபா கல்லூரியில் முதலில் ஒரு 13 வயதினருக்கான கடின பந்து கிரிக்கெட் அணியை உருவாக்க முயற்சித்தார். ஆனால் அது ஓரு கடினமான விடயமாகவே காணப்பட்டது இக்கடின பந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான பொருட்கள் மிகவும் உயர்ந்த விலையில் காணப்படுவதாலும் இப்பாடசாலை ஒரு நடுத்தர பாடசாலை என்பதுடன் க.பொ.த சாதாரண தரம் வரையுள்ள பாடசாலை என்பதால் ஏறாவூர் நகரில் ஒரு இரண்டாம் தர பாடசாலையாகவே காணப்பட்டது.
இருந்த போதிலும் தன் முயற்சியை கைவிடாமல் தன் கழகத்தினருடன் கலந்துரையாடி பலவாறு உதவிகளை பெற்றதுடன். தான் அக்காலத்தில் மட்டக்களப்பில் உள்ள கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் EPP அணியினருக்கு பயிற்சி வழங்கிய காரணத்தால் அவர்களிடம் இருந்தும், பாடசாலை
நலன் விரும்பிகளிடம் இருந்தும் உதவியை பெற்று 13 வயதினருக்கான அணியை உருவாக்கினர். அவ்வணியில் அன்று இணைந்து கொண்டவர்கள் தான் H.S.M.நகையான், I.A.ஆதில் M.N.M.பஜீஸ், சபாஹி, ரிபாஸ் போன்றோர் என்பது இங்கு குறிபிடத்தக்க விடயமாகும்.
அன்று 13 வயதினரை மிகவும் கஸ்டத்தின் மத்தியில் உருவாக்கி முகமட் பாஸில் அவர்கள் இன்று H.S.M.நகையான், I.A.ஆதில் M.N.M.பஜீஸ், சபாஹி, ரிபாஸ் போன்றோரை வளர்த்தெடுத்து 17 வயதிற்குட்பட்ட அணியினராக கிழக்கு மாகானத்தில் இருந்து பாடசாலை மட்ட Div-III போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக திகழ்கின்றது என்றால் அது மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமையான விடயமாகவே உள்ளது எனலாம்.
இன்று ஏறாவூர் அறபா கல்லூரியை பற்றி தான் பேச்சு இதில் இன்னுமொரு முக்கியமான விடயத்தை நாம் நோக்க வேண்டும் அன்மையில் 17 வயதிற்குட்பட்டோருக்கான கிழக்கு மாகாண கிரிக்கெட் அணியில் அறபா கல்லூரியின் H.S.M.நகையான் அவர்களும் M.N.M.பஜீஸ் அவர்களும் தெரிவாகி மற்றுமொரு சாதனையை படைத்துள்ளனர்.
இன்று கிழக்கு மண்ணின் ஒரு விசித்திர புள்ளியாக நம் மத்தியில் திகழும் அறபா கல்லூரியின் கடின பந்து கிரிக்கெட் பயணம் வெறும் 03 வருடங்கள் தான் என்றால் யார் தான் நம்புவார்கள். பல வருட காலமாக புரையோடி கிரிக்கெட் விளையாடும் நம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபலமான பல பாடசாலைகளுக்கு ஏறாவூர் அறபா கல்லூரி ஒரு முன்னுதாரன பாடசாலையாக திகழ்கின்றது.
அன்றும், இன்றும், என்றும் யாவரும் சொல்லும் வார்த்தை இது தான் முதலில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட்டை அறிமுகம் செய்து வளர்த்தெடுங்கள் அதன் பின் கழக மட்டத்தில் முன்னோக்கி, பின்னர் மாவட்ட மட்டத்தில் வளர்த்து, பின்னர் முதல்தர போட்டியை சந்தித்து தேசிய மட்டத்திற்கு செல்வோம் என்பது தான்.
அறபா கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் முக்கியமாக கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் முகமட் பாஸில் அவர்களுக்கும் வெற்றியுடன் திரும்பி வாருங்கள்.
கோட்டைமுனை விளையாட்டு கிராமம், கோட்டைமுனை விளையாட்டு கழகம், EPP சார்பாக இறுதி போட்டியில் வெற்றி பெற வாழத்துகின்றோம்.
Comments
Post a Comment