நவம்பர் மாத இறுதிக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர்..........
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டுஇ சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபரினால் வழங்கப்படும் அடையாளச் சான்று ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவர்களினதும் அடையாளத்தை மீள் சரிபார்க்க வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment