ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம்..............

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமூக அபிவிருத்தி  வேலைத்திட்டம்..............



ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கை (26) அன்று மட்/ம/மே/கரடியனாறு இந்து வித்தியாலய மகாநாட்டு மண்டபத்தில் காலை  மு.ப 8.00 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை நடாத்தி இருந்தது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி  தலைமையக முகாமையாளரான S.இராசலிஙகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொடுவாமடு சக்தி வித்தியாலயம், காயன்குடா கண்ணகி வித்தியாலயம், தளவாய் அஜராத்மானந்தாஜி வித்தியாலயம், பாலர்சேனை கலாசூரி வித்தியாலயம், பன்குடாவெளி RCTMS, இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியலாயம்,வேப்பவெட்டுவான் GTMS, கோப்பாவெளி GTMS, வெளிக்காகண்டி விபுலானந்தா வித்தியாலயம், கரடியனாறு இந்து வித்தியாலயம், மரப்பாலம் GTMS, மாவளையாறு கைலான் வித்தியாலம், கித்தூள் ஸ்ரீகிருஷ்ணா வித்தியாலயம், உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயம், பெரியபுல்லுமலை RCTMS ஆகிய பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 68 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.வளவாளராக ரவிச்சந்திரன் (ISA) அவர்களும், பிரதாபன் ஆசிரியர்  அவர்களும் கலந்து கொண்டனர்

 இந்நிகழ்வில் கரடியனாறு இந்து வித்தியாலய அதிபர் மற்றும்  கோட்டைக் கல்வி அதிகாரி  சி.ஜெயக்குமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 











Comments