இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 'மேட்டின்' விரிப்புக்கள் வழங்கி வைப்பு....
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக பாடசாலைகள் மற்றும் கழகங்களுக்கு மெட்டின் விரிப்புக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கி வருகின்றது. இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பாடசாலைகளுக்கும் எட்டு கிரிக்கெட் கழகங்களுக்கும் மெட்டின் விரிப்புக்கள் கையளித்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ சி.பி.ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சந்தன லால் கருணாரத்ன, நுவரெலியா மாநகர சபையின் மேயர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.எஸ்.என்.பீரிஸ் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி.A.உடுகமசூரிய ஆகியோருர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வானது இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது, இது இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தேசிய வழித் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடமாகும்.
Comments
Post a Comment