இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்.......
ஒக்டோபர்-17 சர்வதேசம் ரீதியாக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1992 டிசம்பர் மாதம் 22ம் திகதி அன்று ஜக்கிய நாடுகள் சபை ஒக்டோபர்-17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தி 1993ம் ஆண்டு முதலாவது வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இருந்த போதிலும் வறுமை ஒழிப்பு தினத்தை பிரான்சின் பாரிஸ் நகரில் 1987ம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலக வங்கியின் கூற்றுப்படி> 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளி உள்ளதாகவும் தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிய ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ்> 'தற்போது தீவிர வறுமை அதிகரித்து வருகிறது> கொரோனா உலகில் உள்ள நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது' என்று கூறி உள்ளார்.
'அனைவரும் சமூக மற்றும் சுற்றுச்சுழல் நீதியை அடைய ஒன்றாக செயறபடுவோம்' எனும் தொனிப் பொருளில் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் வறுமையும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையினால் 2030 ஆண்டு வறுமையை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 தாக்கம் காணமாக வறுமையானது 30 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகில் வறுமைப்பட்டவர்களின் தொகை 420 தொடக்கம் 580 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்கமானது அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற பாகுபாடுகள் இல்லாது எல்லா நாடுகளிலும் காணப்படும்.
வறுமையானது பல முகங்களையும் பரிமானங்களையும் கொண்டது. வறுமை காரணமாக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுபவர்பளாகஇ பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்களாக> போஷாக்கு அற்றவர்களாக> நீதி மறுக்கப்பட்டவர்களாக> அரசியல் அதிகாரம் அற்றவர்களாக> சுகாகாரதர வசதிகள் அற்றவர்களாக மற்றும் கல்வியில் பின்னடைவானவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.
நமது நாட்டில் வறுமை காரணமாக சிறுவர்கள் குடும்பப் பொறுப்பில் பங்காளிகளாக மாற்றப் படும் நிலைமைகள் உருவாகி வேலைகளுக்கு அமர்த்தப் படுகிறார்கள். இவ்வாறு சிறுவயதில் வேலைகளுக்குச் செல்லுகின்ற பிள்ளைகளின் கையில் பணம் கிடைப்பதால் அவர்கள் அனுபவப் போதாமையின் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து சமூகப் பொருத்தப்பாடற்ற நடத்தைகள்> குழு வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. மேலும் நமது நாட்டில் நகரங்களை அண்டி வாழும் வறுமைப் பட்ட குடும்பங்களின் சிறுவர்கள் வீதியோரங்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளன. இதனால் இச் சிறுவர்கள் முறையான கல்வியை பெறும் வாய்ப்பை இழக்கின்றார்கள். மற்றும் வீதியில் பிச்சை எடுப்பவர்களாகவும்> திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களாகவும்> விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாவும் மாற்றப் படுகிறார்கள். மேலும் குடும்ப வறுமை காரனமாக போதிய கவனிப்பு கிடையாததனால் சிறுவர்கள் வழிதவறிச் செல்கின்றார்கள். இவ்வாறான சிறுவர்கள் மதுஅருந்துதல்இ புகைப் பிடித்தல்இ பெற்றோர்களுக்கு கீழ்ப் படியாது வீதியில் அழைந்து திரிகின்றார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வறுமையை ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலம் 'சமுர்த்தித் திட்டம்' மட்டுமே மாற்றமடையாது நிலைத்திருக்கின்றது. 1995ஆம் ஆண்டு 28.8% வீதமாக காணப்பட்ட வறுமை 2016ஆம் ஆண்டு 4.1% மாக குறைக்கப்பட்டது. இருந்த போதிலும் புதிய சமுர்த்திப் பயனாளிகளின் உட்புக்குத்தல் COVID-19 தாக்கம் போன்றன காரணமாக வறுமை வீதம் அதிகரித்திருப்பது பாரிய சவாலாக மாறியுள்ளது.
இன்று வறுமை ஒழிப்புக்காக செலவு செய்யப்பட்டு வரும் 50000 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடாக மாற்றி புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக வறியமக்களை வருமானம் ஈட்டக்கூடியவர்களாக மாற்றியமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையினை குறைக்கலாம் என்பது எதிர்பார்ப்பாகும்.
இதற்காக 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' எனும் இலக்கு சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றி கொள்வதற்கு மக்களை மையப்படுத்திய பொருளாதாரம் எனும் வேலைத்திட்டத்தினூடாக மனைப் பொருளாதார அலகுகள் பலப்படுத்தப்படவுள்ளது. ஓவ்வொரு வீடுகளும் வருமானம் ஈட்டக்கூடியதாக மாற வேண்டும் மேலும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் முயற்சியாளர்களாக மாற வேண்டும் அப்போதுதான் இந்த இலக்கினை அடைந்துகொள்ள முடியும். என்பதில் சந்தேசமில்லை
தற்போது ஏற்பட்டுள்ள வறுமை நிலையை ஒழிக்கப்பட வேண்டுமாயின் வறுமையான மக்களின் சக்தியானது அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன் படுத்தப் படுதல் வேண்டும். வெறுமெனே நலன் உதவிகளை மட்டும் பெற்றுக் கொண்டு வாழக்கூடியவர்களாக இருக்கக் கூடாது. இதற்கு பெண்களின் பங்களிப்பும் பிரதான இடத்தைப் பெறுகின்றது. இவ்வாறான ஓர் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது அனைத்துத் தரப்பினதம் கடமைப்பாடாகும்.
'ஒன்றிணைவோம் வறுமையை ஒழித்திட ஒவ்வொரு வீடுகளையும் வருமானமீட்டும் இல்லங்களாக மாற்றிடுவோம்'
Comments
Post a Comment