பாடசாலை மட்டங்களில் கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி திறமையானவர்களைை ஊக்கப்படுத்தவுள்ளோம் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர்......

 பாடசாலை மட்டங்களில் கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி திறமையானவர்களைை ஊக்கப்படுத்தவுள்ளோம் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர்......



(எம். எச். எம். அன்வர் )

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கமளிக்கவுள்ளோம். இவ்வாறு (22) அன்றைய தினம் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற பிரதேச கலாச்சார விஷேட கூட்டத்தின்போது   கலாச்சாரப் பேரவையின் தலைவரும், பிரதேச செயலாளருமான  யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,காத்தான்குடி  பிரதேசத்தில்  திறமையான கலைஞர்கள்  உள்ளனர். இவர்களின் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். கலை கலாச்சார நிகழ்வுகளை குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தாது பல இடங்களில் நடாத்த வேண்டும். கழகங்கள் தங்கள் நிகழ்வுகளுக்கான உபகரணங்கள் இல்லாவிட்டால் எம்மிடம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய கழகங்களின் மூலம் இவ் உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 

அண்மையில் நிகழ்வு ஒன்றில் மாணவர்கள் கடதாசியால் சுற்றப்பட்ட  ரபான்களை அடிப்பதை அவதானித்தேன். இவ்வாறானவர்களுக்கு உபகரணங்களை வழங்கி நாம்  கலைத்துறையை இப்பிரதேசத்தில் சிறப்பாக மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். கலைத்துறையை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதால் தேவையற்ற பல விடயங்கள் இடம்பெறாமல் தடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில்  கலாச்சார அதிகார சபையின் செயலாளர் ஜாஹிதா  ஜலால்தீன், கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா, கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் மற்றும் பொருளாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துரைகள் தெரிவித்தனர்.






Comments