ஓட்டமாவடியில் அரச அலுவலர்களுக்கு சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பம்......

 ஓட்டமாவடியில் அரச அலுவலர்களுக்கு சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பம்......



அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள, தமிழ் மொழிக் கற்கை நெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18/2020 சுற்று நிருபத்திற்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலர்களுக்கு சிங்களமொழிப் பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச அலுவலர்களுக்கு தமிழ்மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இப் பாடநெறி கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்ளுக்கு இடம்பெற்றது.
நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழிப் பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
150 மணித்தியாலய இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர் ஏ.கே.எம்.றிம்ஸான் கலந்து கொண்டு பாடநெறியினை ஆரம்பித்து வைத்தார்.




Comments