சர்வதேச முதியோர் வாரத்தை முன்னிட்டு இலவச வைத்திய முகாம் மாஞ்சோலையில்........
2022சர்வதேச சிறுவர் தின முதியோர் வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் முதியோர்களுக்கான வைத்திய முகாம் ஒன்றை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாஞ்சோலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ்வைத்திய முகாமில் முதியோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதன்போது நீரழிவு நோய். பல், இருதய நோய் மற்றும் கண் போன்ற நோய்கள் பரிசீலிக்கப்பட்டு நோயாளிகளுக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இவ்வைத்திய முகாமில் மீராவோடை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் எஸ்.ஐ.மர்சூக் தலைமையிலான வைத்தியர் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பான சேவையை வழங்கினர். இந்நிகழ்வுக்கு கோரளைப்பற்று மேற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்கள் கலந்து கொண்டதுடன் இதற்கான ஏற்பாடுகளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.N.M.சாஜஹான் அவர்கள் மேற் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வைத்திய குழாமினருக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment