ஓட்டமாவடியில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு........

 ஓட்டமாவடியில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு........



கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி  வீடமைப்புத் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு  (30) அன்று நடைபெற்றது. 

ஓட்டமாவடி 208 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளுக்கு சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பின் மூலம் 2022 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் வெற்றி பெற்ற பயனாளிகள்  தங்களது வீட்டின் வேலைகளைப் பூரணப்படுத்தி இருந்ததன் பிரகாரம் அவர்களிடம் வீடுகள் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய முகம்மது இப்றாகீம் உதுமா லெப்வை மற்றும் முகம்மது இஸ்மாயில் முகம்மது புஹாரி அவர்களும், சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்புத்திட்டத்தின் கீழ் புனரமைப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளியான உதுமா லெப்பை அப்துல் கபூர் என்பவரின் வீடுகளும்  கையளிக்கப்பட்டது.

கிராம சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர் A.L.M.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார். இந்நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.N.M.சாஜஹான் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருத்தப்படுவதற்கு முன்னர்....


முடிக்கப்பட்டதன் பின்னர்.....


திருத்தப்படுவதற்கு முன்னர்....

முடிக்கப்பட்டதன் பின்னர்.....


திருத்தப்படுவதற்கு முன்னர்....


முடிக்கப்பட்டதன் பின்னர்.....


Comments