முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் அதிகரிப்பு ! பதிவு செய்ய இணையத்தளம் அறிமுகம்...........
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வாராந்தம் 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பில் முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது. பின்னர் ஏனைய மாகாணங்களிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் https://www.wptaxi.lk/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment