அரச உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டி மட்டக்களப்பில்....
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 2022ஆம் ஆண்டிற்கான பாடல் போட்டி (16) அன்று மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிரேஸ்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என இரு பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சுமார் 27 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை பறைசாற்றினர். இம்மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றி பெரும் போட்டியாளர்கள் மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment