சுபீட்சமானதோர் தேசம் - ஒரு லட்சம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்......
சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து ஜப்பான் நாட்டிற்கு வேலைவாய்பை பெற்றுச் செல்லவுள்ளவர்களுக்கான ஜப்பான் மொழிப் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் உள்ள ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளை ஜப்பான் நாட்டிற்கு தொழில் நிமித்தம் அனுப்பி வைப்பதற்காக ஜப்பான் மொழியை கற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தற்போது அவர்களுக்கான ஜப்பான் மொழிப் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 50 இளைஞர், யுவதிகளுக்கான ஜப்பான் மொழிக்கான பாடநெறி 2022 ஒக்டோபர்-17ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment