சமுர்த்தி சிறுவர் சபையால் சிறுவர் தின நிகழ்வுகள்.....

 சமுர்த்தி சிறுவர் சபையால் சிறுவர் தின நிகழ்வுகள்.....



சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் பிரதேச சமுர்த்தி சிறுவர் சபையினால் (01) அன்று சிறுவர் தினக் கொண்டாட்டம் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வை அல் அக்தார் சமுர்த்தி சிறுவர் கழக தலைவரும் பிரதேச சிறுவர் சபை தலைவருமான I.L.M.றிப்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மற்றும் இந்நிகழ்வில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் M.M.சபூஸ்பேகம் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.N.M.சாஜஹான் அவர்களும், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  B.மகேந்திரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

சிறுவர் கழக அங்கத்தவர்களின் பேச்சு, பாடல், குழுப்பாடல், ஆங்கிலப்பேச்சு, ஆங்கிலப்பாடல் போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்ச்சி தொகுப்பினை சிறுவர் சபை செயலாளர் M.I.R.சுக்றா அவர்களும், உறுப்பினர் M.R.F.அப்ஸின் அரீஜ் ஆகியோர்  தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர் கழக அங்கத்தவருகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.













Comments