மட்டு 93 நண்பர்களால் தீபாவளி திருநாளை முன்னிட்டு உலர் உணவு வழங்கி வைப்பு.......

 மட்டு 93 நண்பர்களால் தீபாவளி திருநாளை முன்னிட்டு உலர் உணவு வழங்கி வைப்பு.......



மட்டக்களப்பில் 93ல் உயர்தரம் கற்ற மாணவர்களால் பல உதவிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பில் 93ல் தங்களுடன் கடந்த காலத்தில் கல்வி கற்று தற்போது புலம்பெயர்ந்த வாழும் தம் நண்பர்களின் உதவியைக் கொண்டு இச்செயற்பாட்டை நடாத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பேராவெளி கிராமத்தில் வசிக்கும் 80 வறிய குடும்பங்களுக்கும் குடும்பிமலை கிராமத்தில் வசிக்கும் 70 வறிய குடும்பங்களுக்கும் என மொத்தமாக 150 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்கள் கலந்து கொண்டு உலர் உணவகளை வழங்கி வைத்தார். இவர்களுடன் மட்டக்களப்பு 93 நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இவ்வுதவியை வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"வாழும் போதே மற்றவருக்கு உதவி வாழ்வோம் "














Comments