மயூரதனின் 73 ஓட்டங்களுடன் அம்பாந்தோட்டை அக்கடமிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்னயித்த KSC......

 மயூரதனின் 73 ஓட்டங்களுடன் அம்பாந்தோட்டை அக்கடமிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்னயித்த KSC......



(29) அம்பாந்தோட்டை கிரிக்கெட் அக்கடமிக்கு எதிரான போட்டியில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அம்பாந்தோட்டை கிரிக்கெட் அக்கடமிக்கும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்குமான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது (29) அன்று அம்பாந்தோட்டையில் நடைபெற்றறு வருகின்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கோட்டைமுனை விளையாட்டு கழகம் 30 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதில் அணித்தலைவர் மயூரதன் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 51 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 05 நான்கு ஓட்டங்கள் 04 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 73 ஓட்டங்களை மிக விரைவாக பெற்று அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அம்பாந்தோட்டை கிரிக்கெட் அக்கடமி சார்பாக அசார் 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

 தற்போது மதிய போசன இடை வேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அம்பாந்தோட்டை கிரிக்கெட் கழகம் துடுப்பெடுத்தாடி களம் நுழையவுள்ளது.





Comments