5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான உளவளவிருத்தி கருத்தரங்கு....
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான உளவளவிருத்தி கருத்தரங்கு இன்று (29) ஏறாவூர் நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
4 வளவாளர்களால் நிகழ்த்தப்பட்ட இக் கல்விக் கருத்தரங்கில் 400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் இரண்டு பகுதிகள் கொண்ட இரண்டு தொகுதிகள் மாதிரி வினாப்பத்திரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஒரு தொகுதி வினாப்பத்திரம் பல்லூடக காட்சியுடன் ஒலிபெருக்கி வசதியுடன் சமகாலத்தில் விளக்கக் குறிப்புகளுடன் முதல்தொகுதி வினாப்பத்திரம் செய்து காண்பிக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு வளவாளர்களாக நசீர் அகமட், மனாப், அன்சார், ராஜீன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தரும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டியாக உள்ள றிழா அவர்களும் கலந்து கொண்டானர் இந்நிகழ்வினை ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கணேசமூர்த்தி அவர்கள் நெறிப்படுத்த பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெஸீல், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உதவியாளர் அஜீஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெஸீமா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
Comments
Post a Comment