5.நல்லூரில் பிறந்த தமிழரான 'சத்தி' 1950ல் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைவரானார்...... இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........
யாழ்ப்பாணம் நல்லூரில் 1919ல் பிறந்தவர் தான் சத்தியேந்திரன் குமாரசுவாமி இவரை எல்லோரும் 'சத்தி' என்றே செல்லமாக அழைப்பர். இவர் 1949-50 காலங்களில் இலங்கை அணிக்கு தலைவர் பதவி வகித்துள்ளார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் அது தான் உண்மையின் வரலாறு இனி நாம் இவரைப்பற்றி பார்ப்போம்.
செல்லப்பா குமாரசுவாமிக்கும் மங்கயர்கரசிக்கும் மகனாக பிறந்த இவர் ஆரம்பத்தில் அரச உத்தியோகத்தராக கடமையாற்றி இருந்தார். இவர் பத்மினி என்பரை கரம்பற்றி வாழ்ந்து வந்தார். கிரிக்கெட் மீது அதித காதல் வயப்பட்டதால் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார். இதன் வாயிலாக இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு முன் இவர் 1940 தொடக்கம் 1951 வரையான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக விளையாடிய ஒரு தமிழர் ஆவார். இவர் தன் ஆரம்ப கல்வியை யாழ்ப்பானத்தில் தொடர்ந்தாலும் பிற்காலத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார் இதன் போது இன்றும் பரபரப்பாக பேசப்படும் ரோயல்-தோமியன் பாடசாலை சமரிலும் தன்னை இணைத்து விளையாடி. பின்னர் கொழும்பு தமிழ் யூனியன் கழகத்திலும் தன்னை அங்கத்தவராக்கி விளையாடியதன் பயனாக இலங்கை அணியிலும் இடம்பிடித்துக் கொண்டார்.
ஒரு வலது கை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவும், ஒரு வலது கை சுழல் பந்து வீச்சாளராகவும் தன்னை இனங்காட்டிக் கொண்ட இவர் 1948ம் ஆண்டு இலங்கை அணிக்காக அவுஸ்திரேலியாவுடன் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்த போட்டியில் அப்போதைய அவுஸ்திரேலிய பிரபல துடுப்பாட்ட வீரர்களான நீல் ஹார்வி மற்றும் ரான் ஹேமென்ஸை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றியதுடன் அப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் பின் 1948-49ம் ஆண்டு காலங்களில் ஜான் கோட்டில் மேற்கிந்திய தீவுக்காக விளையாடி முதல் போட்டியில் 06 மற்றும் 35 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 67 மற்றும் 41 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்
1949-50 காலங்களில் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பணத்தை இலங்கை அணி மேற்கொண்ட போது இலங்கை அணிக்கு தலைவராகவும் செயற்பட்ட ஒரு தமிழ் வீரரர் தான் சத்தியேந்திரன் குமாரசுவாமி அவர்கள். இதன் பின் காமன் வெல்ம IX அணிக்கெதிரான இரண்டு போட்டிகளுக்கு இலங்கை அணியை வழி நடாத்திய பெருமை இவரையே சாரும். இக்கால கட்டத்தில் தமிழ் யூனியன் அணியையும் வழிநடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதுவரை 14 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய இவர் 385 ஓட்டங்களை பெற்றுன்னார், இதில் அதிகபட்ச ஓட்டமாக 57 ஓட்டங்களையும் ஒரு அரைச்சதம் இதில் அடங்குகின்றது. பந்து வீச்சை பொறுத்தவரை 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார் இதில் சிறந்த பெறுதியாக 81 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதுடன் 07 பிடிகளையும் கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விடமாகும்.
MCCயின் கௌரவ உறுப்பினராக இருந்த இவர் 1988 ஜனவரி 15ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார் இவர் ஞாபகார்த்தமாக கொழும்பு ரோயல் கல்லூரியில் கிரிக்கெட், டெனிஸ், தடக்களம் போன்றவற்றிக்கு இவரின் பெயரால் வருடாந்தம் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்படியும் நம் தமிழர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளார்களா? என தோன்றுகினற்றதா? தேடுவோம் நம் தமிழரின் பெருமையை....
இது 1947ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இவ்வணியில் இரண்டு தமிழ் வீரர்கள் அந்த காலத்திலேயே இலங்கை அணியில் விளையாடியுள்ளனர். நிற்பவர்களில் இடமிருந்த வலமாக 05வதாக நிறபவர் தான் சத்தியேந்திரன் குமாரசாமி மற்றையவர் இருப்பவர்களில் இடமிருந்து வலமாக 06வதாக இருப்பவர் தான் அக்காலத்தின் இலங்கையின் கிங்மேக்கர் மகாதேவன் சதாசிவம் அவர்கள் இது தான் உண்மை வரலாறு.
Comments
Post a Comment