புனித மிக்கல் கல்லூரி 39 ஓட்டங்களால் வெற்றி....
திருகோணமலை TRINCO BOYS விளையாட்டுக்கழகத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான T20 கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் (wells Cricket Ground)ல் நடைபெற்று வருகின்றன.
இதில் (25) அன்று நடைபெற போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியும் திருகோணமலை விவேகானந்தா கல்லூரியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடி புனித மிக்கல் கல்லூரி 20 ஓவர்களில் 08 விக்கெட்டக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது துடுப்பாட்டத்தில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக அணித்தலைவர் S.லதர்சன் 27 பந்துகளில் 25 ஓட்டங்களையும், A.அபிலாசன் 20 பந்துகளில் 23 ஓட்டங்களையும், V.சதுர்ஜனன் 15 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் விவேகாணந்தா கல்லூரி சார்பாக அணித்தலைவர் திருச்சிலோகநா நிவிராம் 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், கிருஸ்ணநாதன் சதுர்சன் 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை விவேகானந்தா கல்லூரி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் திருச்சிலோகநா நிவிராம் 25 பந்து வீச்சில் 18 ஓட்டங்களையும், தவயோகநாதன் சுகிர்தன் 12 பந்து வீச்சில் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக J.அபிலாசன் 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், M.தனுசன் 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர் இதன் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 39 ஓட்டங்களால் முதல் வெற்றியை பதிவிட்டுக் கொண்டது.
Comments
Post a Comment