29ம் திகதி புனித மிக்கல் கல்லூரி அரையிறு போட்டியில் வெற்றி பெற்றால் 30ல் இறுதி போட்டிக்கு நுழையும்.....

 29ம் திகதி புனித மிக்கல் கல்லூரி அரையிறு போட்டியில் வெற்றி பெற்றால் 30ல் இறுதி போட்டிக்கு நுழையும்.....



திருகோனமாலை ரிங்கோ போய்ஸ் விளையாட்டுக்கழகம் தனது நான்காவது வருடபூர்த்தியை முன்னிட்டு 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்திவரும் T20 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி உவர்மலை விவேகானந்தா கல்லூரியை எதிர்த்து களம் கண்டு வெற்றிபெற்றது. தற்போது அவர்கள் அரையிறுதிப்போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (29) திருமலை சென்.ஜோசப் கல்லூரியோடு விளையாடவுள்ளது. மறுமுனையில் சிங்கள மகா வித்தியாலயம் விபுலானந்தா கல்லூரியுடன் மோதவுள்ளது,  வெற்றி பெறும் பாடசாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) திருமலை இந்துக்கல்லூரியோடு மற்றுமொரு அரையிறுதிப்போட்டியில் விளையாடும். அரையிறுதிப்போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு பாடசாலை அணிகளும் இறுதிப்போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) இந்துக்கல்லூரி மைதானத்தில் சந்திக்கவுள்ளது.



Comments