27வது தடவையாக மோதும் சிவானந்தா VS கோணேஸ்வரா சமர்..............

 27வது தடவையாக மோதும் சிவானந்தா VS கோணேஸ்வரா சமர்..............



இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சமர்களில் ஒன்றாக கனிக்கப்படும்  Battle of tha Golds  எனும் சமரை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையும் திருகோனமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியும் வருடாந்தம் மோதிக் கொண்டு வருகின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் -19  காரணமாக தடைப்பட்டிருந்த இச்சமர் இவ்வாண்டு 27வது தடவையாக 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இச்சமரானது 1993ம் ஆண்டு மென் பந்து போட்டியாகவே முதல் போட்டி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் அப்போதைய சிவானந்தா பாடசாலையின் அதிபர் திரு.விஜயரெட்னம் அவர்களாலும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அதிபரான திரு தண்டாயுதபாணி அவர்களாலும் ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டிகளுக்கு தலைவர்களாக சிவானந்தா பாடசாலை அணிக்கு திரு.நிலக்சன் அவர்களும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணிக்கு திரு.பௌமி அவர்களும் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டியில் சிவானந்தா பாடசாலை 59 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து. பதிலுக்கு துடுப்பெடுத்ததடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி 03 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

2022ம் ஆண்டுக்கான 27வது சமரானது சிவானந்தா பாடசாலையின் அதிபர் க.சுவர்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அதிபரான எஸ்.பத்மசீலன் அவர்களின் தலைமையிலும் நடைபெறவுள்ளது. இச்சமருக்கு சிவானந்தா பாடசாலை அணிக்கு தலைவராக ஜெ.நிரூபன் அவர்கள் செயற்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இச்சமர் சிறப்பாக நடைபெற நாமும் வாழ்த்துவேம்.




Comments