அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) பூட்டு......

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) பூட்டு...........



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
 இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு நாளை மின்வெட்டு இருக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments