புனித மிக்கல் கல்லூரிக்கு 2022ல் தேசிய மட்டத்தில் முதல் பதக்கம்.........
அகில இலங்கை பாடசாலைகளுக்;கான விளையாட்டு போட்டியானது கேகாலையில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் டியோன் செலர் 18 வயதிற்குட்பட்டோருக்கான 74 கிலோ எடையுடைய தைக்குவாண்டோ போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் மூன்றாவது .இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கி கொண்டார். இது மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கு 2022ல் கிடைத்த முதல் பதக்கமாகும்.
கிழக்கு மாகான போட்டியில் முதல் இடத்தை பெற்ற டியோன் செலர் தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ் வெற்றியை பெற்றுள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் இவ்வாண்டு முதல் தடவையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த தைக்குவாண்டோ போட்டியாகும். இப்போட்டிக்காக இம்மாணவரை பயிற்றுவித்து வெற்றி களம் காண உழைத்திருக்கின்றார் புனித மிக்கல் கல்லூரியின் விளையாட்டு பொறுப்பாசிரியரான M.P.குகாதரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment