ஒக்டோர்-17ல் பல்வேறு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது - மட்டு சமுர்த்தி பணிப்பாளர்.......

 ஒக்டோர்-17ல் பல்வேறு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது - மட்டு சமுர்த்தி பணிப்பாளர் ......

 ஒக்டோபர்-17 ஆகிய இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தினமாக ஜக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் 1987ம் ஆண்டை வறுமை ஒழிப்பு தினமாக பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்டு வந்த  போதிலும் 1993ல் இருந்து ஜக்கிய நாடுகள் சபை வறுமை ஒழிப்பு தினத்தை கொண்டாடுவதற்கான அங்கீகாரத்தை 1992ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி வழங்கி இருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்கள் சர்வதேச வறுமை ஒழிப்பு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும்தெரிவிக்கையில்...
 இலங்கையிலும் 1993ல் இருந்தே இத்தினம் அனுஸ்டித்து வந்த போதிலும் இலங்கையில் சமுர்த்தி திட்டம் 1994ல் ஆரம்பிக்கப்பட்ட போது சமுர்த்தி திட்டத்தில் மிக முக்கியமான ஒரு தினமாக உள்வாங்கப்பட்டு ஆண்டு தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கை சமுர்த்தி திணைக்களம் அன்றைய தினத்தில் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
 இதற்கமைய 2022ம் ஆண்டின் ஒக்டோபர்-17ம் திகதி அன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தால் 14 பிரதேச செயலகங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கமைய ஒரு லட்சம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஜப்பான் மொழி பயிற்சிக்கான வேலைத்திட்டம் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், சிறார்களுக்கான சத்துணவை வழங்கி போசாக்கை அதிகரிப்பதற்காக முன்பள்ளி சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இச்செயற்பாடு டிசம்பர் 31 வரை செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 17 வீடுகள் சமுர்த்தி பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெறுவதுடன், முதியோருக்கான நலனுதவி கொடுப்பணவு அவரவர் வீடுகளில் கொண்டு சேர்க்கும் வன்னம்  நிகழ்வுகளும் இடம்பெறுவதுடன், சிப்தொற புலமை  பரிலுக்கான கொடுப்பணவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Comments