நாளை (16) மாபெரும் பெனடிக் ஞாபகார்த்த இறுதிப்போட்டி.......
நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி அணியினரும் டிஸ்கோ யூனியர் அணியினரும் மோதவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டில் தற்போது விளையாட்டு துறையில் ஒரு புத்துனர்ச்சியுடன் வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. உதைபந்தாட்டம், டெனிஸ், கபடி, மெய்வல்லுனர், கூடைபந்தாட்டம் போட்டிகளை குறிப்பிடலாம்.
இருந்த போதிலும் மட்டக்களப்பில் பலராலும் பேசப்படும் ஒரு விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு. இவ்விளையாட்டு இன்றைய கால கட்டத்தில் பாடசாலை மட்டத்தில் ஒரு வரலாற்று சாதனையை ஏறாவூர் அறபா கல்லூரி சாதித்து காட்டியுள்ளது. இதுவரை பாடசாலை மட்ட போட்டிகளில் (Div-III) போட்டிகளில் மட்டக்களப்பில் இருந்து ஒரு சில பாடசாலைகள் மட்டும் தான் ஓர் இரு போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் இதன் ஆட்டம் முடிவடைந்து விடுகிகன்றது. ஆனால் ஏறாவூர் அறபா கல்லூரி இறுதி போட்டி வரை சென்று சாதனை படைத்துள்ளது. இது நாளை நடைபெறவுள்ள போட்டிகளுக்கு ஒரு முன்னுதாரமாக காணப்படுகின்றது.
ஒரு இளம் பராய பாடசாலை மாணவனின் கிரிக்கெட் விளையாட்டு 13 வயதில் தொடங்கப்பட்டு பாடசாலை மட்ட போட்டிகள் 19வயது வரை நடைபோடுகின்றது. இதில் முன்னேற்றம் அடைபவர்கள் பிற்காலத்தில் தன் தொழில் சார் கிரிக்கெட்டை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே இப்போட்டிகள் மூலம் பல பாடசாலைகளும் விழிப்படைந்து இனி வரும் காலத்திலாவது பாடசாலை கிரிக்கெட்டை வளர்க்க முயற்சிக்கட்டும்
Comments
Post a Comment