நலன்புரி கொடுப்பவிற்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதி ஒக்டோபர் - 15.......

 நலன்புரி கொடுப்பவிற்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதி ஒக்டோபர் - 15.......



நலன்புரி கொடுப்பனவை பெற தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி ஒக்டோபர் - 15 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. 

எனவே இதில் தற்போது சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள், தற்போது முதியோர் கொடுப்பனவு பெறுவோர், பெற காத்திருப்போர், விசேட தேவையுடைய கொடுப்பனவு பெறுவோர், பெற தகுதியுடையோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தற்போது  பெறுவோர், பெற தகுதியுடையோர், பொதுசன மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தினை பெற்று கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

தவற விடாமல் விண்ணப்பங்களை பெற்று தங்கள் பிரதேச செயலகத்தில்  15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் படி கோரப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள தங்கள் தங்கள் கிராம சேவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்வும். அல்லது 011 2 151 481 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது 1919 துரித அழைப்பு இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பெற்று பெற்றறுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சகலருக்கும் சென்றடையும் வன்னம் பகிரும் படி அனைவரையும் வேண்டி நிற்கின்றோம்.

Comments