100வயது தாயார் வாழும் போது வாழ்த்தப்பட்டார்......
"வாழும் போதே மனிதனை வாழ்த்த வேண்டும் வளரும் போதே சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" இன்றைய பொருளாதார நெருக்கடியிலும் நம் உலகில் நடைபெறும் வரும் ஒரு நல்லவிடயமாக பதிவிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர்-01 சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும், சிறுவர் பிரிவும், சமூக சேவை பிரிவும் இனைந்து சிறந்ததொரு செயற்பாட்டு நிகழ்வை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் S.H.முசாமில் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை அன்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடாத்தி இருந்தது.
இந்நிகழ்வில் சமுர்த்தி பயனுகரியான கதிஜா உம்மா அவர்கள் 100 வயதை கடந்தும் வாழ்கிறார், அவரை வாழும் போதே வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளில் வாழ்த்தியது மற்றோருக்கு ஒரு நெகிழ்ச்சியான விடயமாக காணப்பட்டது. இவர் மாவடிச்சேனை 208/A கிராமத்தை சேர்ந்தவர், ஆரம்ப காலம் முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து செயற்பட்டு வரும் ஒரு போற்றப்படும் தாயாவார்.
மற்றுமொரு நிகழ்வு மேலும் மேலோங்கி இருந்தது சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வறிய மாணவர்களுக்கு சிப்தொற புலமை பரிசில் வழங்கப்படுவது தாங்கள் அறிந்த விடயமே. இந்த சிப்தொற புலமை பரிசிலினை கடந்த காலங்களில் பெற்று தங்கள் கல்வியை தொடர்ந்த 17 சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் இம்முறை பல்கலை கழகத்திற்கு தெரிவாகி, அதிலும் ஒருவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாயுள்ளது, இவ் சிப்தொற புலமை பரிசிலுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. வளரும் போதே சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் இதற்காக அவர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்..
மற்றுமொரு நிகழ்வில் வயது முதிர்ந்த 15 முதியவர்களுக்கு கட்டில்கள் மற்றும் அதற்கான சகல வசதிகளும் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும், சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனும் கருப்பொருளுடன் வாழைச்சேனை அன்நூர் பாடசாலையில் இருந்து விழா நடைபெற்ற மண்டபம் வரை அதிதிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
இச்சிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளார் A.நவேஸ்வரன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் கோரளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர், மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் அலி அக்பர் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment