மேலும் 03 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.....
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 03 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (01) அன்று பிரதேச செயலாளர் S.H.முசாமில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 650000 பெறுமதியான சமுர்த்தி ரன்வீமன வீடமைப்பு திட்டத்தில் கீழ் ஒரு வீடும், 225000 பெறுமதியான சமுர்த்தி சிறி வீமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் 02 வீடுகளும் சமுர்த்தி பயனாளிகளிடம் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் A.நவேஸ்வரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் P.புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு உரிய பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.A.M.பஸீர் அவர்களும், மாவட்ட செயலக சமூக அபிவிருத்தி திட்ட முகாமையாளர் K.புவிதரன் அவர்களும், மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.குகதாசன் அவர்களும், வங்கி முகாமையாளர் S.ரவிச்சந்திரன் அவர்களும், பிரிவின் கிராம உத்தியோகத்தர் அமானுல்லாஹ் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் அவர்களும் மற்றும் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment