இன்றைய சிறுவர்களே நாளைய சாதனையாளர்கள்..... மட்டு சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன்.......
இன்றைய சிறுவர்களே நாளைய சாதனையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் சிறுவர் முதியோர் தினத்திற்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இன்றை சிறார்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள் ஆனால் இன்றைய சிறார்கள் நாளைய சாதனையாளர்கள் என்பதே சாலச்சிறந்த கருத்தாக எனக்கு தென்படுகின்றது. இவர்கள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறி வருகின்றார்கள் விளையாட்டு, கல்வி, கண்டுபிடிப்புக்கள் என பல்வேறு பட்ட துறைகளில் தம்மை வளர்த்தும் வருகின்றார்கள். எங்கு பார்த்தாலும் இச்சிறார்கள் சாதனைகளை தான் படைத்து வருகின்றார்கள். அன்மையில் கூட மட்டக்களப்பு மாவட்டத்திற்கே டெனிஸ் விளையாட்டில் சாதனை படைத்த சிவானந்தா தேசிய பாடசாலையின் சிறுவர்களின் சாதனையை பார்த்துள்ளோம் எனவே இன்றைய சிறார்கள் நாளைய சாதனையாளர்கள் என்பதில் எதுவித ஐயமில்லை. இதே போல் முதியோர் நம் பொக்கிசங்கள் அவர்களின் கடந்த கால அனுபவமே இன்று நம் செயற்பாடாகவும் ஒரு பாடமாகவும் அமைகின்றது. எனவே நாட்டில் உள்ள சகல சிறுவர் மற்றும் முதியோர்களுக்கு தன் வாழ்த்துச் செய்தியை தெவிப்பதுடன், இன்றைய நாள் சர்வதே சிறுவர் முதியோர் தினமாக உலகளாவிய ரீதியாக பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சர்வதே சிறுவர் முதியோர் தினத்தை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் நாடுபூராகவும் வருடந்தோறும் சிறப்பித்து வருகின்றன. இன்றை தினத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஊடாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment