FIBA 3x3 Asia Cup 2022 தேசிய அணி தெரிவு போட்டிகளுக்கு மிக்கல் கல்லூரி மாணவர்கள் கொழும்பில்...
எதிர்வரும் மாதங்களில் மலேசியாவில் நடைபெறவுள்ள 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய நாடுகளுக்கான கூடைபந்தாட்ட போட்டியில் தேசிய அணியில் இணைத்துக் கொள்வதற்கான பயிற்சி தெரிவு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்யும் 05 மாணவர்கள் கொழும்பு பயணமாகியுள்ளனர்.
மீண்டுமொரு முறை நம் மண்ணின் பெருமையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக புனித மிக்கேல் கல்லூரியின் புகழை உலகெங்கும் எடுத்துச் செல்லக்கூடிய இம் மாணவர்களை நாம் வாழ்த்துகின்றோம். இவர்களுக்கான தெரிவு போட்டிகள் 24 மற்றும் 25ம் தினங்களில் SLBF 3x3 Courts, Independence Square, Colomboல் நடைபெற்றுள்ளது. இவர்கள் தேசிய அணியில் இணைந்து வெற்றிகளை பெற்றுவர மீண்டுமொரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment