சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை தேசிய மரநடுகை வேலைத்திட்டம் களுவாஞ்சிக்குடியில்.....
சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் 2022.09.17ம் திகதி தொடக்கம் 2022.09.23ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் களுதாவளை-02 ஈஸ்வரன் ஆலய முன்றலில் அன்மையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த மரநடுகையில் நீண்டகாலம் பயன்தரக் கூடிய பயன் தரும் மரங்கள் நடப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ஆனந்தமோகன் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் S.தமிழ்வாணி அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஈஸ்வரன் ஆலய நிர்வாகத்தினர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment