சௌபாக்கியா விசேட வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு களுதாவளை கிராமத்தில்....

 சௌபாக்கியா விசேட வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு களுதாவளை கிராமத்தில்....



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை-03 கிராமத்திற்கான 2022ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி சௌபாக்கியா விசேட வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  2022.09.05ம் திகதி அன்று  மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வீட்டுத் திட்டத்திற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 6,50,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. முன்னைய காலங்களில் 6,00,000 வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போதைய பொருளாதார நிலை காரணமாக 50,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. மொத்தமாக 10,00,000 ரூபாவில் முடிக்கப்பட வேண்டிய இவ்வீட்டை சமுர்த்தி பயனாளி தம் பங்களிப்பின் மூலமும்,   கிராமத்தில் உள்ள தனவந்தர்களின் உதவியைப் பெற்றும் இவ் வீட்டினை நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்பட வேண்டும். சமுர்த்தி திட்டத்தின் செயற்பாடே குடிசை வீடுகளில் வாழ்வோரை கல் வீடுகளில் குடியமர்வதேயாகும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு 2022ம் ஆண்டில்  03 விசேட சௌபாக்கியா வீடுகள் அமைத்துக் கொள்வதற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

 இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ஆனந்தமோகன் அவர்களும். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரி சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







Comments