சமுர்த்தி லொட்டறி வீடு பயனாளிடம் ஒப்படைப்பு.....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் பல்வேறுபட்ட வீட்டுத்திட்டங்கள் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
1.6,50,000 சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம்
2.2,25,000 சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம்
3.1,25,000 வீடு திருத்துவதற்கான வீட்டுத்திட்டம்
4.திரியபியச வீட்டுத்திட்டம்
5.சமுர்த்தி நிவாரன லொட்டறி வீட்டத்திட்டம்
இத்திட்டங்களில் மூலம் வருடம் தோறும் குடிசை வீடுகளில் வாழும் வறிய மக்களை கல் வீடுகளில் வாழ வைப்பதற்கான முயற்சியினை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேற் கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் 2022ஆம் ஆண்டுக்கான பெப்ரவரி மாதத்திற்கான சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற ஓட்டமாவடி 208 கிராம பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனுகரியான உ.லெ. புகாரி முகம்மது என்பவரின் வீடு திருத்தியமைக்கப்பட்டு கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களினால் 2022.09.09 அன்று உரிய சமுர்த்தி பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளர் M.N.M,சாஜஹான் மற்றும் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் A.L.M.நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment