அனைத்து விளையாட்டு உத்தியோகத்தர்களையும் பாராட்டுகின்றேன் - மட்டு அரச அதிபர்.....
2022ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது இடத்தினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விடயம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் K.கருணாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
(26) அன்று மாவட்ட அரச அதிபரிடம் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் வெற்றிக்கிண்ணத்தை கையளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் இவ் வெற்றிக்காக இரவு பகல் பாராது மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல விளையாட்டு உத்தியோகத்தர்களும் கடமையாற்றியுள்ளீர்கள், தங்களின் அர்ப்பணிப்பான சேவையின் நிமித்தமே இந்த வெற்றி கிட்டியுள்ளது. நமது மண்ணின் வீர வீராங்கனைகளுக்கு நீங்கள் வழங்கிய பயிற்சிகள், ஆலோசனைகள் எண்ணிலடங்காதவை குறிப்பாக உங்கள் அணைவரையும் வழிநடாத்திய மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டது முக்கிய விடயமாகும்.
Comments
Post a Comment