சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை எனும் தொனிப்பொருளில் சுற்றாடல் வேலைத்திட்டமும் மர நடுகையும்.....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் புதியதொரு வேலைத்திட்டமாக பசுமை நிற தாயக அறுவடை எனும் தொனிப் பொருளில் சுற்றாடலை பாதுகாப்பதுடன், மரங்களை நட்டு பசுமைக்கும் வேலைத்திட்டம் வாகரை பிரதேச செயகத்திற்குட்பட்ட கரையோர வலயமான காயாங்கேணி கிராமத்தில் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் G.அருணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் K.கருனாகரன் அவர்கள் பிரதம அதிதயாக கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும், அரச அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நடப்பட்ட மரங்களை பராமரிப்பதற்காக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களிடம் மரங்கள் கையளிக்கப்பட்டது, தற்போது பாரி செயற்பாடுகளை செய்து வரும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இம்மரங்களை வளர்பதன் மூலம் ஒரு பசுமையான தேசத்தை உருவாக்க தான் முயற்சிப்பதாக உறுதியளித்தனர்.
Comments
Post a Comment